என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சரின் சட்டப்பூர்வ நடவடிக்கையால் மீண்டும் பொறுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளேன்: அமைச்சர் பொன்முடி
- கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான்.
- தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பொன்முடி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான். அவர் எடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் காரணமாகத்தான், நான் இந்த பொறுப்பில் மீண்டும் அமர வைக்கப்பட்டுள்ளேன்.
எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கட்சியின் வக்கீல்கள் வில்சன், இளங்கோ உள்ளிட்டோருக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






