search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பயிர் பாதிப்பு பார்வையிட அமைச்சர் குழு- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
    X

    பயிர் பாதிப்பு பார்வையிட அமைச்சர் குழு- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    • பயிர் பாதிப்பு பற்றி வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர்.
    • அமைச்சர் இரண்டு பேர் பயிர்கள் சேதம் குறித்த புள்ளி விவரங்களை தரவேண்டும்.

    சென்னை:

    கடந்த சில நாட்களாக தஞ்சை, திருச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையின் காரணமாக நீரில் சாய்ந்து மூழ்கியது. இது அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர். இதை தொடர்ந்த தமிழக முதலமைச்சர் கூடுதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

    அதில் அமைச்சர் இரண்டு பேர் எந்ததெந்த மாவட்டங்களில் நெற்பயிர் உள்ளிட்ட அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்பது பற்றிய கணக்கெடுத்து புள்ளி விவரங்களை தரவேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர். இவர்களோடு வேளாண்துறை செயலாளர், இயக்குநர்கள், மூத்த அதிகாரிகள் எல்லாம் களஆய்வு மேற்கொண்டு வருகிற திங்கட்கிழமை பயிர் சேத விவரங்களை அறிந்து மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான பயிர் காப்பீட்டு தொகை பெற்று தருவது குறித்து முடிவெடுப்பார்கள்.

    அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×