search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீப்பெட்டி அல்லது எரிவாயு சிலிண்டர் சின்னம் கோரும் ம.தி.மு.க
    X

    தீப்பெட்டி அல்லது எரிவாயு சிலிண்டர் சின்னம் கோரும் ம.தி.மு.க

    • ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது.
    • பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க மறுப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார்.

    இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.

    ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, புதிய சின்னம் குறித்த நாளை தெரிவிக்கப்படும் என துரை வைகோ தெரிவித்தார்

    இந்நிலையில், பம்பரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், மதிமுக மாற்று சின்னம் கோரியுள்ளது.

    அதன்படி, மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி அல்லது எரிவாயு சிலிண்டர் சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×