என் மலர்
தமிழ்நாடு

தி.மு.க.வின் 'பி' டீம் என்பதை ஓ.பி.எஸ். நிரூபித்துள்ளார்- ஜெயக்குமார் கருத்து
- அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.
- ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார். இதற்காக பா.ஜனதாவிடம் ஆதரவு கோரப்போவதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே கூறி வந்தோம். இப்போது அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்து இருப்பதன் மூலம் அவர் தி.மு.க.வின் 'பி.டீம்' என்பதை நிரூபித்து விட்டார்.
அ.தி.மு.க.வை வீழ்த்தத்தான் அவர் வேட்பாளரை நிறுத்துகிறார். ஆனால் அவர் கனவில்கூட வீழ்த்த முடியாது.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அவர் தனி மனிதர்தான். தனி மனிதராக ஆதரவு கேட்பதற்கும் கட்சி ஆதரவு கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தனி மனிதருக்கு எந்த கட்சியும் ஆதரவு அளிக்காது.
நாங்கள் கூட்டணி தர்மப்படி இன்று மாலையில் பா.ஜனதா தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.