search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணையில் இருந்து திண்டுக்கல், ஆத்தூருக்கு குடிநீர் வினியோகம்- அமைச்சர் கே.என்.நேரு
    X

    வைகை அணையில் இருந்து திண்டுக்கல், ஆத்தூருக்கு குடிநீர் வினியோகம்- அமைச்சர் கே.என்.நேரு

    • காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன.
    • வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    திண்டுக்கல்லில் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு கூடுதலாக 18 எம்.எல்.டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.131 கோடி மதிப்பில் பழைய பைப் லைன்கள் அகற்றப்பட்டு புதிய பைப்லைன்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதன்மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×