search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு
    X

    சென்னையில் நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு

    • ஒரு இடத்தில் நிலையான முகாமும் 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது.
    • இதுவரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 38 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

    சுமார் 1 லட்சம் முகாம்களில் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நேற்று வரையில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 942 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 11 லட்சத்து 63 ஆயிரத்து 277 பேரும் போடாமல் உள்ளனர்.

    இதுவரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 38 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் நிலையான முகாமும் 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    தடுப்பூசி போடாமல் உள்ளவர்கள் பெயர் விவரம் சுகாதாரப் பணியாளர்களிடம் உள்ளதால் அவர்கள் அந்தந்த வீடுகளுக்கு சென்று முகாம் அருகில் நடைபெறுவதை கூறி தடுப்பூசி போட அழைக்க உள்ளனர்.

    முதல் தவணை தடுப்பூசி அதிகம் போடாமல் உள்ள மாவட்டங்களில் ராணிப்பேட்டை முதல் இடத்திலும் (21 சதவீதம்), கன்னியாகுமரி 2-வது இடத்திலும்(18 சதவீதம்), 3-வது இடமான தேனி மாவட்டத்தில் 17 சதவீதம் பேரும் உள்ளனர்.

    சென்னை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, கரூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

    மாவட்டம் வாரியாக தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    சென்னை -13,72,219

    கோவை -6,23,576

    கடலூர் -5,77,932

    திருப்பூர் -5,66,197

    செங்கல்பட்டு -6,30,294

    சேலம் -5,67,315

    திருச்சி -5,02,050

    மதுரை -7,14,206

    ஈரோடு -5,43,054

    திருவள்ளூர் -4,82,295

    விழுப்புரம் -2,98,783

    நாமக்கல் -5,27,697

    திண்டுக்கல் -3,02,242

    விருதுநகர் -4,31,493

    திருவாரூர் -3,91,499

    தூத்துக்குடி -3,94,921

    தஞ்சாவூர் -3,63,366

    திருநெல்வேலி -4,55,472

    காஞ்சிபுரம் -1,44,686

    கிருஷ்ணகிரி -5,05,406

    கன்னியாகுமரி -5,37,220

    திருவண்ணாமலை -2,24,895

    ராமநாதபுரம் -2,55,099

    வேலூர் -1,90,043

    தேனி -3,69,603

    புதுக்கோட்டை -2,01,737

    கள்ளக்குறிச்சி -1,77,922

    திருப்பத்தூர் -3,77,157

    சிவகங்கை -1,88,268

    ராணிப்பேட்டை -3,47,526

    அரியலூர் -76,631

    மயிலாடுதுறை -2,00,624

    நாகப்பட்டினம் -1,93,719

    தர்மபுரி -2,59,910

    தென்காசி -1,41,529

    கரூர் -83,292

    நீலகிரி -1,13,046

    பெரம்பலூர் -64,510

    Next Story
    ×