search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகருக்கு அடுத்த 9 மாதத்துக்கு குடிநீர் கையிருப்பு உள்ளது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
    X

    சென்னை மாநகருக்கு அடுத்த 9 மாதத்துக்கு குடிநீர் கையிருப்பு உள்ளது: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

    • வீராணம் ஏரிக்கு 350 கனஅடி நீர்வரத்து மூலம் ஏரியின் இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது.
    • தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் கால்வாய் மூலம் மழைநீர் 90 கனஅடி வருகிறது. இதன் மூலம் ஏரியின் கொள்ளளவு 1,833 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.) ஆக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக 95 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 104 கனஅடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 613 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது. 12 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 386 கன அடி நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 2,726 மில்லியன் கன அடியாக (2.7 டி.எம்.சி.) உள்ளது.

    500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 10 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் இருப்பு 438 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி (3.6 டி.எம்.சி.) ஆகும். 153 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 132 மில்லியன் கனஅடி (3.1 டி.எம்.சி.) அதாவது 85.93 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    வீராணம் ஏரிக்கு 350 கனஅடி நீர்வரத்து மூலம் ஏரியின் இருப்பு 318 மில்லியன் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 66 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 384 மில்லியன் கனஅடி (8.3 டி.எம்.சி.) நீர் இருந்தது. 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி (13 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 9 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 68.52 சதவீதமாகும்.

    சென்னை மாநகருக்கு சராசரியாக ஒரு மாதத்துக்கு 1 டி.எம்.சி. வரை தேவைப்படும் நிலையில், அடுத்த 9 மாதத்துக்கு நீர் இருப்பு கைவசம் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 8 ஆயிரத்து 384 மில்லியன் கன அடி (8.3 டி.எம்.சி.) நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழை மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. அதேநேரம் அணையின் பாதுகாப்பை கருதி உபரி நீரை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் திறப்பு ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×