search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டி : நயினார் நாகேந்திரன்
    X

    தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டி : நயினார் நாகேந்திரன்

    • நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    "தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்

    பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமை அடையாததால் அடுத்தகட்ட பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    Next Story
    ×