என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
81 சட்டசபை தொகுதிகளில் 2-வது இடத்தை பிடித்த பா.ஜ.க.
- வரும் சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியை பா.ஜ.க. கொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- தென்சென்னை தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு அடுத்த படியாக 2-ம் இடத்தை பா.ஜ.க. பிடித்திருக்கிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை. 39 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியே கைப்பற்றி உள்ளது.
ஆனால் கடந்த தேர்தல்களை விட பா.ஜ.க இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டதன் காரணமாகவும் அண்ணாமலையின் பிரச்சாரத்தாலும் பா.ஜ.க.வுக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. போட்டியிட்ட 23 பாராளுமன்ற தொகுதிகளில் 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. வாக்கு சதவீதமும் 11.24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சட்டப்பேரவை தொகுதி வாரியாக பார்க்கும்போது தி.மு.க. கூட்டணி 221 சட்டப்பேரவை தொகுதி முதல் இடத்தைப் பிடித்து உள்ளது. எடப்பாடி, திருமங்கலம், திருகோவி லூர், உளுந்தூர்பேட்டை, சங்ககிரி, பரமத்தி வேலூர், குமாரபானையம், அரியலூர், ஜெயங்கொண்டம் , அருப்புக்கோட்டை ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியும் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் தொகுதிகளில் பா.ம.க.வும் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.
பா.ஜ.க. எந்தவொரு சட்டப்பேரவை தொகுதியிலும் முதல் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், ஏராளமான தொகுதிகளில் அ.தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 2,90,683 வாக்குகள் பெற்று , அ.தி.மு.க. வேட்பாளரான ஜெயவர்தனை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை பிடித்தார்.
மேலும், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு அடுத்த படியாக 2-ம் இடத்தை பா.ஜ.க. பிடித்திருக்கிறது.
இதேபோல், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 1,69,159 வாக்குகளைப் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார். இந்த தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளரை விட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றிருக்கிறது.
வடசென்னை தொகுதியில் 1,13,318 வாக்குகளை பெற்று 3-ம் இடத்தை பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 2-ம் இடத்தை பா.ஜ.க. கைப்பற்றி இருக்கிறது.
அந்த வகையில் சென்னையில் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 13 இடங்களில் பா.ஜ.க. 2-ம் இடத்தை பிடித்திருக்கிறது.
இதேபோல், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.வி. பாலகணபதி 2-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.
இந்த தொகுதியில், கும்பிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 2-ம் இடத்தை பிடித்து அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அந்த வகையில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. தமிழகத்தில் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இதன் மூலமாக தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டபேரவை தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு சட்டப் பேரவை தொகுதிகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு பா.ஜ.க. வந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
எனவே வரும் சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியை பா.ஜ.க. கொடுக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்