search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைத்தேன்... அண்ணாமலை-திருமாவளவன் திடீர் சந்திப்பு
    X

    ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைத்தேன்... அண்ணாமலை-திருமாவளவன் திடீர் சந்திப்பு

    • அண்ணாமலையை நேரில் பார்த்ததும் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தனர்.
    • தொடர்ந்து அருகில் இருந்த மத்திய மந்திரி எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோரிடம் கைகுலுக்கி கொண்டார்.

    சென்னை:

    மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மரணம் அடைந்தபோது தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை நேரில் வழங்குவதற்காக அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோர் நேற்று மேல்மருவத்தூர் சென்று பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியை சந்திக்க சென்றார்கள்.

    அவர்கள் காரைவிட்டு இறங்கியபோது அங்கு ஏற்கனவே லட்சுமி பங்காருவை சந்தித்துவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியே வந்தார்.

    அண்ணாமலையை நேரில் பார்த்ததும் இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தனர். அப்போது, அண்ணாமலையிடம், 'வாங்க... வாங்க... ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைத்து கொண்டிருந்தேன்' என்று திருமாவளவன் சிரித்தபடியே கூற 'ரொம்ப சந்தோஷம் அண்ணா' என்று அண்ணாமலை கூற ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

    தொடர்ந்து அருகில் இருந்த மத்திய மந்திரி எல்.முருகன், கேசவ விநாயகன் ஆகியோரிடம் கைகுலுக்கி கொண்டார்.

    அப்போது திருமாவளவனிடம் நலம் விசாரித்து கொண்டார்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். பின்னர் திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×