search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்லும் பள்ளி மாணவி
    X
    மழையில் இருந்து தப்பிக்க குடை பிடித்து செல்லும் பள்ளி மாணவி

    குமரியில் மழை நீடிப்பு- பெருஞ்சாணி அணை 50 அடியை எட்டுகிறது

    பேச்சிப்பாறை அணை நிரம்பியதையடுத்து கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதனால் இதமான குளிர்காற்று வீசி வருகிறது. மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.

    இரணியல், குளச்சல், கன்னிமார், பூதப்பாண்டி, ஆணைக்கிடங்கு பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 43.6 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 2½ அடி உயர்ந்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று காலை 48.85 அடியாக உள்ளது. அணைக்கு 1320 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணைக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை நீர்மட்டம் இன்று மாலைக்குள் 50 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44.56 அடியாக உள்ளது. அணைக்கு 1346 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 21 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.90 அடியாகவும், சிற்றாறு1 அணையின் நீர்மட்டம் 11.12 அடியாகவும், சிற்றார்2 அணை நீர்மட்டம் 11.21 அடியாகவும் உள்ளது.

    பேச்சிப்பாறை அணை நிரம்பியதையடுத்து கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.



    Next Story
    ×