என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    .
    X
    .

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தம்

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூரில் பழைய அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 4 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.   

    இதன் அருகில்  600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையம் உள்ளது. 

    இவைகள் மூலமாக தினசரி மொத்தம் 1,440 மெகாவாட் மின் உற்பத்தி எடுக்கப்படும். இதில் நேற்று இரவு 840 மெகாவாட் பழைய அனல் மின் நிலையத்தில்   கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது ஏற்பட்டது.

    இதனால் 2-வது யூனிட்டில் 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. மேலும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×