என் மலர்
செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை இன்று வரை ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 45 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதிகள் முழுவதிலும் வசிக்கும் அனைவருக்கு அனைத்துத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று அவர்களின் வெப்பநிலை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையம், மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் போதுமான அளவு இருக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா தடுப்பூசியைப் பொருத்தவரை மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான அளவு சுகாதாரத்துறை வழங்கி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இப்போது 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் 1,016 பேரும், நாகை மாவட்டத்தில் 1,605 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 847 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.