search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனு கொடுக்க வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள்
    X
    மனு கொடுக்க வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள்

    புதுக்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாடு- நூதன முறையில் மனு அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி

    தண்ணீருக்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் பாசம் பிடித்து துர்நாற்றத்துடன் அசுத்த தண்ணீர் வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி புகார் கூறி உள்ளது.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு, சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கையில் கொட்டாங்குச்சி ஏந்தி, கொட்டாங்குச்சியிலாவது தண்ணீர் கொடுங்கள் என்று கூறி, நகராட்சி ஆணையரிடம் நூதன முறையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக  மனு அளிக்கப்பட்டது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களாகவே புதுக்கோட்டை நகரில் குடிதண்ணீர் சரிவர வரவில்லை. கடந்த 25 நாட்களாக எந்தப் பகுதியிலும் முழுமையாகவே வரவில்லை. பணம் உள்ளவர்கள் அதற்கான மாற்று வழியாக பணம் கொடுத்து கேன் தண்ணீர் வாங்கிக் கொள்கிறார்கள். அன்றாடம் குடும்பம் நடத்தவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வந்தாலும் அதில் கழிவுநீர் கலந்து வருவதாக, தகவல் வருகிறது. அப்படி வரும் தண்ணீரை மக்கள் பயன்படுத்தினால், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. 

    மனு கொடுக்க வந்த நிர்வாகிகள்

    ஆகையால் புதுக்கோட்டை நகர மக்களின் அவஸ்தைகளை மனதில் கொண்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் வரும்படி செய்யவேண்டும். அதற்கும் தாமதமாகும் நிலையில் அனைத்து நகர பகுதிகளுக்கும் நகராட்சி குடிநீர் வண்டியை அனுப்பி மக்களின் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். 

    முன்புள்ள நடைமுறையில் தெருவுக்குத் தெரு அடி பம்புகள் அமைக்கப்பட்டிருந்தன அந்த அடி பம்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி தற்போது மின் மோட்டார் மூலம் பிளாஸ்டிக் தொட்டி அமைத்துள்ளீர்கள். ஊரை சுற்றிலும் தைல மரக்காடுகள் உள்ளதால் நிலத்தடியில் நீர் இல்லாத காரணத்தினால் மின் மோட்டார்கள் தண்ணீரை இழுக்க முடியாமல் ஒரு சில பகுதியில் பழுதடைந்து கிடக்கிறது. தண்ணீருக்காக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் பாசம் பிடித்து துர்நாற்றத்துடன் அசுத்த தண்ணீர் வருகிறது. அதையும் சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×