என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஆண்டிப்பட்டி அருகே 9-ம்வகுப்பு மாணவி பலாத்காரம்- வளர்ப்பு தந்தை கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே மது ஊற்றி கொடுத்து 9-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

  ஆண்டிப்பட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்து தனியாக 4 வயது சிறுமியுடன் வசித்து வந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

  பாலமுருகனும், அந்த பெண்ணும் வாய்பேச முடியாதவர்கள். இவர்களுக்கு குழந்தை இல்லை. தற்போது அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது மகளை பாலமுருகனுடன் விட்டு சென்றுவிட்டார்.

  இதனை பயன்படுத்தி கொண்ட பாலமுருகன் இரவில் தனது மகளுக்கு வாயில் மது ஊற்றி கொடுத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே தனது தாயிடம் சிறுமி தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வருசநாடு போலீசில் புகார் அளித்தார்.

  போலீசார் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை அவரது தாயுடன் அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×