என் மலர்

  செய்திகள்

  எல் முருகன்
  X
  எல் முருகன்

  கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் முருகனுக்கு ஆயுர்வேத சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  கோவை:

  தமிழக பா.ஜனதா தலைவராக இருப்பவர் எல்.முருகன். இவர் கடந்த சில நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.

  இதையடுத்து கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத டாக்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றனர். இதையடுத்து எல்.முருகன் கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத் தலைவர் எல்.முருகன் சிகிக்சைக்கு மத்தியிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர். சேகர், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், ராகவன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இதில் தமிழகத்தில் அரசியல் கூட்டணி வியூகம், சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் விதம், வேட்பாளருக்கான தகுதிகள், தேர்தல் நிதி திரட்டுவது உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன.
  Next Story
  ×