என் மலர்

  செய்திகள்

  பழனி- செந்தில்
  X
  பழனி- செந்தில்

  மயிலாப்பூரில் தகாத உறவில் ஈடுபட்ட தம்பி படுகொலை- அண்ணன் வெறிச்செயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மயிலாப்பூரில் தகாத உறவில் ஈடுபட்ட தம்பியை படுகொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
  சென்னை:

  சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 33). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி-குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி செந்திலும் (31) அதே பகுதியில் வாழ்ந்தார். இவரும் ஆட்டோ ஓட்டும் தொழில் தான் செய்து வந்தார். செந்திலின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவிக்கும், 2-வது மனைவிக்கும் குழந்தைகள் உள்ளனர்.

  செந்தில் தனது அண்ணன் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கு அண்ணன் பழனி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் அவர்களது குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியபடி இருந்துள்ளது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. பழனி தனது தம்பி செந்திலிடம் சண்டை போட்டுள்ளார். திடீரென்று இரும்பு கம்பியால், செந்திலை, பழனி தாக்கியுள்ளார். இதில் செந்தில் நிலைகுலைந்துள்ளார். அடுத்து பெரிய கான்கிரீட் கல் ஒன்றையும் செந்திலின் தலையில் போட்டு, பழனி வெறிதாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  பலத்த காயம் அடைந்த செந்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். தகாத உறவு அண்ணன்-தம்பி குடும்பத்தையே கொலை மூலம் நாசப்படுத்தி விட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் போலீஸ் படையுடன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

  கொலை செய்யப்பட்ட செந்திலின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளி பழனியும் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×