என் மலர்
செய்திகள்

பப்ஜி விளையாட்டு - கோப்புப்படம்
ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மாணவர் உயிரிழப்பு
ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிய மாணவர் மாரடைப்பு காரணமாக பலியானதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கருங்கல் பாளையம்:
ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதிஷ்குமார் (16).நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் சதிஷ் குமார் செல்போனில் பப்ஜி விளையாட்டை ஆன் லைனின் நண்பர்களுடன் குழுவாக விளையாடுவது வழக்கம்.
சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து அவர் பப்ஜி விளையாட்டு விளையாடி கொண்டிருந்தார்.அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் சதிஷ் குமாரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சதிஷ்குமார் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

Next Story