என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஆதீனம்
    X
    மதுரை ஆதீனம்

    கோளறு திருப்பதிகம் பாடி கொரோனாவை ஒழிப்போம்- மதுரை ஆதீனம் வேண்டுகோள்

    திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம் பாடி கொரோனாவை ஒழிப்போம் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மதுரை:

    மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நவக்கிரகங்கள் மூலம் ஏற்படும் துன்பங்களை நீக்கிடவும், பிளேக், காலரா, மலேரியா போன்ற தொற்று வியாதிகள் ஓடிச் சென்றிடவும், இந்திய-சீன யுத்தம் 1962-ம் ஆண்டில் நடந்தபோதும், புயல் மழை தொடர்ந்து பெய்து வெள்ளக்காடாக மாறிய போதும், திருஞான சம்பந்த பெருமான் பாடிய கோளறு திருப்பதிகத்தைப் பாடி மக்கள் நலம் பெற்று வாழ்ந்த வரலாற்று செய்திகள் உண்டு.

    இப்படிப்பட்ட பெருமையும், அருமையும் வாய்ந்த திருஞானசம்பந்தப் பெருமானின் ‘‘கோளறு திருப்பதிகத்தை’’ அனைவரும் மனம் உருகப் பாடி, சிவபெருமான்-பார்வதி தேவயின் பேரருளால் ‘‘கொரோனாவை’’ முற்றிலும் ஒழிப்போம். நாம் நாட்டு மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவோம்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×