search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்- ஜி.கே.வாசன்

    அ.தி.மு.க.கூட்டணி தமிழக உள்ளாட்சி தேர்தலில் மிக அமோக வெற்றியை பெறும் என்று பண்ருட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    பண்ருட்டி:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பண்ருட்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில்வெற்றிடம் என்பது ஏதும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான மக்கள் பணியினை ஆட்சியாளர்கள் செய்துவருகின்றனர். ரபேல் போர் விமான வழக்கில் எதிர்கட்சியினரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நற்சான்றாக கருதுகிறேன்.

    தமிழக அரசு 5 மாவட்டங்களை புதியதாக பிரித்து அந்த மாவட்டங்களில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. அந்த அந்த மாவட்ட மக்களுக்கு இதுநல்ல செய்தி மட்டும் அல்ல. அந்தந்த மாவட்டங்கள் பல்வேறு துறையிலான வளர்ச்சியை உறுதி செய்து உள்ளது.

    தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததற்கு எதிர்க்கட்சியான தி.மு.க. வழக்கு போட்டதுதான் அடிப்படை காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நல்ல சூழலை ஆளும்அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தி உள்ளது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க.கூட்டணி தமிழக உள்ளாட்சி தேர்தலில் மிக அமோக வெற்றியை பெறும். கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதைஎதிர்த்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு மீண்டும் முயற்சி எடுக்க வேண்டும். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற இறுதி தீர்ப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×