என் மலர்
செய்திகள்

மதுவுக்கு எதிராக காட்பாடி சட்ட கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய மாணவி நந்தினி.
வேலூர் தொகுதியில் மதுரை மாணவி நந்தினி மதுவுக்கு எதிராக பிரசாரம்
வேலூர் தொகுதியில் பொதுமக்களை சந்தித்து மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி அவர்களிடம் மதுரை மாணவி நந்தினி கையெழுத்து வாங்கினார்.
வேலூர்:
மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மதுவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று காட்பாடி சட்டக் கல்லூரிக்கு வந்தார். அங்கிருந்த மாணவ, மாணவியிடம் மதுவுக்கு எதிராக கையெழுத்து வாங்கினார். பொதுமக்களிடமும் வாங்கினார்.
இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள வேலூருக்கு வந்தார். அங்கு பொதுமக்களை சந்தித்து மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்து கூறி அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்.
மக்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருள் விற்பது இந்திய தண்டனை சட்டம் 328-ன் படி குற்றம். இச்சட்டபடி போதை தருகிற, உடல் நலத்தை கெடுக்கிற எந்த பொருளையும் யாருக்கும் கொடுக்க கூடாது. இந்த குற்றத்திற்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை தரப்படவேண்டும். ஆனால் மது நாட்டுக்கு, உயிருக்கு கேடு என்று எழுதி வைத்துவிட்டு டாஸ்மாக் மூலம் உடல் நலத்தை கெடுக்க கூடிய பொதை பொருளை விற்பனை செய்து வருகின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் விபத்துகளால் மரணம் ஏற்படும் என்று ஹெல்மெட்டை கட்டாய படுத்தும் கோர்ட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடாதது ஏன்?
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போதை பொருளை வாங்கி குடிப்பதால் எண்ணற்ற நோய்கள், விபத்துக்கள், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு பாதிப்புகள், கலாசார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. பள்ளி மாணவர்கள் கூட மது போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். எனவே டாஸ்மாக் கடைகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் நடத்துவது அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி டாஸ்மாக்கை மூட உத்தரவிடாமல் போதை பொருள் விற்பதை அனுமதிப்பது சட்டவிரோதம். அரசின் கொள்கை முடிவை விட சட்டமும், மக்களின் உயிரும் பெரிது.
எனவே இந்திய தண்டனைச் சட்டம்-328க்கு எதிராக செயல்பட்டுவரும் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும், மதுபான பார்களையும் மது உற்பத்தி ஆலைகளையும் மூட ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்களிடம் கையெழுத்து வாங்கி ஐகோர்ட்டில் ஒப்படைக்க உள்ளோம்.
வேலூர் தொகுதியில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் மதுவை ஒழிப்போம் என்று கூறினீர்களே ஏன் மதுகடைகளை மூடவில்லை என்று கேள்வி கேளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story