என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  போதையில் மயங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்த வாலிபர் - பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடசேரி பஸ் நிலையத்தில் போதையில் மயங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
  நாகர்கோவில்:

  நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

  வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து தான் சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் செல்வதால் இரவு, பகல் எந்நேரமும் இங்கு பயணிகள், பெண்கள், அவர்களை வழி அனுப்ப வந்தவர்கள் என கூட்டம் அலைமோதும்.

  நேற்று இரவிலும் இதுபோல பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு இடையே 35 வயதுடைய இளம்பெண் ஒருவர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

  அந்த இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் நீண்டநேரமாக பின் தொடர்ந்தபடி இருந்தார். இதனை பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் சிலர் பார்த்தனர்.

  அப்போது அந்த பெண் கன்னியாகுமரி செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதிக்கு சென்றார். அந்த வாலிபரும் அந்த பெண்ணை பின்தொடர்ந்தபடி அங்கு சென்றார். அங்கு போனதும் அந்த பெண் திடீரென பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்தார்.

  பிளாட்பாரத்தில் மயங்கி கிடந்த அந்த பெண்ணின் அருகில் வாலிபர் சென்றார். பின்னர் அவரை சற்று மறைவான பகுதிக்கு இழுத்து சென்று அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

  அந்த வாலிபரை ஏற்கனவே கண்காணித்த பயணிகள் சிலர், அவர் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்வதை கண்டதும் அருகில் சென்று கண்டித்தனர். மேலும் மயங்கி கிடந்த பெண் யார் எனவும் விசாரித்தனர்.

  அப்போது வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் பொதுமக்கள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து வடசேரி பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே மயங்கி கிடந்த பெண்ணின் கணவர் அவரை தேடிக்கொண்டு அங்கு வந்தார். அவர் மனைவி பிளாட்பாரத்தில் மயங்கி கிடப்பதையும், அவரை சுற்றி மக்கள் கூடி நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று மனைவியை எழுப்பிய போது அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து பெண்ணின் கணவர், ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் மனைவியை அழைத்து சென்றார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×