என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற பெண்
  X
  சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற பெண்

  வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை கடத்த முயற்சி - சேலத்தில் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை ஒரு பெண் கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  சேலம்:

  சேலம் ஜான்சன்பேட்டை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்(வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு நிவேதா(9), சரவணன்(3) என்ற 2 குழந்தைகள் உள்ளது.

  இந்நிலையில் அந்த பகுதியில் 10 நாட்களாக ஒரு பெண் சுற்றி திரிந்தார். நேற்று அந்த பெண் ஜஸ்டின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிவேதாவை அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் குழந்தையை மீட்டு அந்த பெண்ணை விரட்டி விட்டனர். இன்று காலை அதே பெண் ஜஸ்டின் வீட்டிற்கு சென்று நிவேதாவிடம் எனது குழந்தையை கொடு என்று கூறி அங்கு விளையாடிகொண்டிருந்த சரவணனை கடத்த முயன்றார்.

  இதனால் பயந்துபோன நிவேதா உறவினர்களிடம் தகவல் கூறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு குழந்தையை மீட்டு அந்த பெண்ணை பிடித்து குழந்தையை மீட்டனர். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் யார் என்று தெரியவில்லை, சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்தனர்.

  தற்போது குழந்தை கடத்தல் சம்பவம் பல்வேறு பகுதிகளில் நடப்பதால், சேலத்தில் குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  Next Story
  ×