search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை, பள்ளிகொண்டாவில் வருமான வரி சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல்
    X

    திருவண்ணாமலை, பள்ளிகொண்டாவில் வருமான வரி சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல்

    திருவண்ணாமலை மற்றும் பள்ளிகொண்டாவில் வருமான வரியினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #ITRaid

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகப்பன். திருவண்ணாமலை டவுன் அணைகட்டி தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் கணக்கில் வராத பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரிதுறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நாகப்பன் வீடு, அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது கணக்கில் வராத ரூ.59 லட்சத்தை கட்டுகட்டாக பறிமுதல் செய்தனர். பணத்தை கைபற்றி நாகப்பனிடம் விசாரணை நடத்தினர். இரவு 10 மணிக்கு சோதனை நிறைவடைந்தது.


    ரூ.59 லட்சம் எப்படி வந்தது. தேர்தலுக்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் ரோட்டில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.

    இங்கு நேற்று மாலை 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். வணிக வளாகத்தில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். நள்ளிரவு 1.30 மணிக்கு சோதனை முடிந்தது.

    இதில் கணக்கில் வராத ரூ.44 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் யாருடையது, எதற்காக பதுக்கி வைக்கப்பட்டது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர். #ITRaid

    Next Story
    ×