search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபாமா நிகர்நிலை பல்கலை.யில் வளாகத் தேர்வு- மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
    X

    சத்யபாமா நிகர்நிலை பல்கலை.யில் வளாகத் தேர்வு- மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. #SathyabamaUniversity #CampusInterview
    சென்னை:

    சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் வளாகத் தேர்வை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் சமீபத்தில் நடந்த வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.



    நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கவுரவித்தார்கள். காஃக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார்.

    வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த மாணவர்களில் 91.2 விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன்  வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன. இந்த 267 நிறுவனங்களில் 63 நிறுவனங்கள் மாணவர்களின் உலகத்தரம் வாய்ந்த கனவு நிறுவனங்களாக உள்ளன.

    புதிய உச்சமாக 186 மாணவர்கள் ரூபாய் 4.5 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.

    வேலைவாய்ப்பு வளாகத் தேர்வின் முக்கிய அம்சங்கள்:

    1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு ரூ.18 இலட்சம்

    2. சராசரி ஆண்டு ஊதியம் ரூ.3.5 இலட்சம்

    3. புதிய நிறுவனங்களில் பல்வேறுபட்ட விரும்பத்தக்க பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

    4. எச்சிஎல் நிறுவனம் 100 மாணவர்களுக்கு ரூ.4.75 இலட்சம் ஆண்டு ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒற்றைக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட உச்ச எண்ணிக்கை ஆகும்.

    காக்சிசன்ட், விப்ரோ, டிசிஎஸ், நீல்சன், அமேசான், ஹிட்டாச்சி, டைட்டன், எச்சிஎல், ஆரக்கிள், வெரைசான், டாடா கம்யூனிகேசன்ஸ், ரெனால்ட் நிசான், கோட்டக், போஸ்ச், யமஹா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வளாகத்தேர்வில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. #SathyabamaUniversity #CampusInterview
    Next Story
    ×