search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்.
    X
    டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்.

    டீ தயாரித்து, காலணிகளுக்கு பாலீஷ் போட்டு வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #MansoorAlikhan
    கொடைக்கானல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அவரே தராசு பிடித்து பொதுமக்களுக்கு காய்கறி வழங்கினார். திண்டுக்கல் நகர் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்து கரும்பு விவசாயிக்கு ஓட்டு போடுங்க. மற்றவங்களுக்கு ஓட்டு போட்டா வேட்டு வச்சிருவாங்க என்று பிரசாரம் செய்தார்.

    நேற்று கொடைக்கானல் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஏரிச்சாலை, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரே பிரசாரம் செய்தார். அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம், செவன்ரோடு, கே.சி.எஸ். திடல் ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டார்.

    டீக்கடைக்குள் சென்ற அவர் டீ தயாரித்து எனக்கு ஓட்டு போடுங்கள். இதை விட நல்ல டீயாக தருகிறேன் என்று தமாசாக பேசினார். அங்கு நின்றவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர். மூஞ்சிக்கல் பகுதிக்கு சென்ற அவர் செருப்பு தைக்கும் கடைக்கு சென்று பொதுமக்களின் காலணிகளுக்கு பாலீஷ் போட்டு ஆதரவு கோரினார்.



    இது குறித்து அவர் கூறுகையில் நாம் தமிழ் கட்சியை பலர் கூட்டணிக்கு அழைத்தனர். நாங்கள் செல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சியினர் பின்னர் எதையும் நிறைவேற்றுவதில்லை. மத்தியில் தமிழர் ஆள வேண்டும். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் நான் நல்லது செய்ய மாட்டேன். சினிமாவில் வில்லனாகத்தான் நடித்தேன். அது போலதான் செயல்படுவேன் என்றார்.  #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #MansoorAlikhan
    Next Story
    ×