என் மலர்

  செய்திகள்

  புதுவை பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங். வேட்பாளரை ரங்கசாமி நாளை அறிவிக்கிறார்
  X

  புதுவை பாராளுமன்ற தொகுதி என்.ஆர்.காங். வேட்பாளரை ரங்கசாமி நாளை அறிவிக்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ரங்கசாமி நாளை அறிவிக்கிறார். #rangasamy #parliamentelection

  புதுச்சேரி:

  புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் சார்பில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை சேர்ந்த டாக்டர் நாராயணசாமி கேசவன் போட்டியிடவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

  இந்நிலையில் நேற்றைய தினம் ரங்கசாமி வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியுடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார்.

  இதைத்தொடர்ந்து புதுவைக்கு திரும்பிய ரங்கசாமி இன்று சேலத்தில் உள்ள தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலுக்கு சென்றார். அவருடன் வேட்பாளர் டாக்டர் நாராயணசாமியும் சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

  இன்று மாலை 4 மணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் ஓட்டல் அண்ணா மலையில் நடக்கிறது.

  இந்த கூட்டத்தில் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள், தேர்தல் பணிக்குழு ஆகியவை நியமிக்கப்படுகிறது. நாளை வெள்ளிக்கிழமை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியை அறிவிக்கிறார்.

  அதேநேரத்தில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு என்ஆர்.காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

  Next Story
  ×