என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐடி நிறுவன கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து பலி
    X

    ஐடி நிறுவன கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து பலி

    ஐடி நிறுவன கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மயிலாப்பூரை சேர்ந்தவர் ஜான்பீட்டர் (24). இவர் கத்திப்பாராவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    பல மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை துடைத்து சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாலை ஈடுபட்டார். 10-வது மாடியில் உள்ள வெளிப்புற கண்ணாடிகளை துடைத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது பாதுகாப்புக்காக கயிற்றுடன் கட்டி இருந்த இடுப்பு பெல்ட் திடீர் என்று கழன்றது. இதனால் ஜான்பீட்டர் 10-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×