search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 இடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் உள்ள மற்ற கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டி உள்ளது. ம.தி.மு.க. 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளும், கம்யூனிஸ்டு கட்சிகள் 3 தொகுதிகளும் கேட்பதாக தெரிகிறது.

    தே.மு.தி.க. எந்த கூட்டணியில் சேரும் என்பது முடிவாகவில்லை. எனவே தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சியும் நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் இன்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனையின் போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவும் உடன் இருந்தார். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    கோவையில் இன்று மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாநாடு முடிந்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #MKStalin
    Next Story
    ×