என் மலர்

  செய்திகள்

  அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றிகளை குவிக்கும்- கடம்பூர் ராஜூ பேட்டி
  X

  அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றிகளை குவிக்கும்- கடம்பூர் ராஜூ பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் வெற்றிகளை குவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #kadamburraju #admk

  ஆறுமுகநேரி:

  காயல்பட்டினம் நகராட்சியில் மக்கள் நல திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் மணிராஜ் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் முருகன் வரவேற்று பேசினார்.

  விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு காயல்பட்டினத்தில் 5 இடங்களில் ரூ. 90 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டியும், ரூ 1.90 கோடி செலவிலான சாலை பணிகள், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பயோகேஸ் திட்டம், நகராட்சியில் சேவை குறைபாடுகள் மற்றும் ஆலோசனை பதிவு மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

  காலத்திற்கேற்ப மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதனை உணர்ந்து நிறைவேற்றுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலனுக்காக இந்த ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நோன்பு காலங்களில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தையும், ஹஜ் மானியம் அளிக்கப்படும் திட்டத்தையும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயல்படுத்தினார். ஜெயலலிதா வழியில் தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்படுத்துகிறது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, தாசில்தார் தில்லைபாண்டி , சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ், பொறியாளர் சுரேஷ், நகராட்சியின் முன்னாள் தலைவர்கள் வாவு செய்யது அப்துர்ரகுமான், வகீதா, மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் அபுல்ஹஸன் கலாமி, வாவு சுலைமான், அமானுல்லா, நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது இப்ராகிம், பேரவை செயலாளர் அன்வர், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்ற நிலைபாட்டில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. இதுபற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குளம்பிப்போய் உள்ளார். அவர் அந்த தீர்ப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணி மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் தமிழகத்தில் வலுவான மெகா கூட்டணியாக அமைந்து வெற்றிகளை குவிக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார். #kadamburraju #admk

  Next Story
  ×