என் மலர்
செய்திகள்

சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.
அரியலூர் ராணுவ வீரர் குடும்பத்திற்கு வைகோ நேரில் ஆறுதல்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko
அரியலூர்:
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். வேரோடு அழிக்கப்படவேண்டும். சிவச்சந்திரன் தனது மகனை ஐ.பி.எஸ். ஆக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒரு மகனை இழந்த சிவச்சந்திரனின் பெற்றோர் இவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறிய போதும் நாட்டுக்காக செல்கிறேன் என கூறியுள்ளார்.
எனவே சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்ல அரசு வேலையை வழங்க வேண்டும். மேலும் சிவச்சந்திரனுக்கு சிலை அமைத்து நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து சிவச்சந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வைகோ மலரஞ்சலி செலுத்தினார். இதேபோல் திரைப்பட நடிகர் தாமுவும் சிவச்சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Vaiko

Next Story