என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
குடிக்க பணம் கேட்டு தாயை கொடுமைப்படுத்திய வாலிபர் குத்திக் கொலை
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பாலாடி வட்டத்தை சேர்ந்தவர் தோபியாஸ் (32). வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்தது.
தோபியாசின் தாய் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவரை திருச்சூரை சேர்ந்த லோரன்ஸ் ஹோம் நர்சாக இருந்து கவனித்து வந்தார்.
தோபியாஸ் தனது தாயிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த தோபியாஸ் தனது தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
இதனை லோரன்ஸ் கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த லோரன்ஸ் மீன் வெட்டும் கத்தியால் தோபியாசை சரமாரியாக குத்தினார். அவரது வயிறு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து பாலாடி வட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோபியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலாடி வட்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி லோரன்ஸை கைது செய்தனர். அவரை கொச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.