என் மலர்
செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை
சென்னை ஐஐடி பேராசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Suicide
சென்னை:
கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் அதிதி சின்னா (45).
கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார்.
நேற்று இரவு அதிதி சின்னா திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கினார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அதிதி சின்னா பரிதாபமாக இறந்தார்.
அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. குடும்பத்தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேலை பார்த்த இடத்தில் ஏதாவது பிரச்சினை இருந்ததா? என்று பல்வேறு கோணத்தில் கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Suicide
Next Story