என் மலர்

  செய்திகள்

  சபரிமலையில் இளம்பெண்கள் செல்லும் விவகாரத்தில் நல்ல புரிதல் இல்லை - எச். ராஜா
  X

  சபரிமலையில் இளம்பெண்கள் செல்லும் விவகாரத்தில் நல்ல புரிதல் இல்லை - எச். ராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்லும் விவகாரத்தில் நல்ல புரிதல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறினார். #Sabarimala #HRaja
  தென்காசி:

  தென்காசி சட்டமன்ற தொகுதியின் பாஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாம் குற்றாலத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டார்.

  முன்னதாக எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் எந்த பகுதியிலும் இந்துக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. சிறுபான்மையினரால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல், செருப்பு வீசினார்கள். ஆனால் இந்த சம்பவங்களில் பல இந்துக்களை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  குற்றாலத்தில் உள்ள தெப்பக்குளத்தில், அருகில் உள்ள பள்ளிவாசலின் கழிவுநீர் கலக்கிறது. இதனை எதிர்த்து போராடி வருகிறோம். நீதிமன்ற தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை ஏலம் எடுப்பவர்கள் உள் வாடகைக்கு விடக்கூடாது. உள் வாடகைக்கு விடுவது சட்ட விரோதமாகும். இதை கவனிக்க வேண்டும்.

  இந்து விரோத சக்திகளுக்கு தி.மு.க. தலைமையாக செயல்படுகிறது. ராம ராஜ்ய ரதயாத்திரை வரும்போது சட்டமன்றத்தில் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவேசமாக கோ‌ஷமிட்டார். மு.க.ஸ்டாலினும் இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதால் அந்த கட்சியில் உள்ள இந்துக்கள் வெளியில் வர வேண்டும். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளில் இருந்தும் வெளியில் வர வேண்டும். மகாபுஷ்கரம் தாமிரபரணியில் நடக்க இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கிறார்கள். புஷ்கரத்துக்கு சிறப்பு ரெயில் விடப்படுகிறது. மாநில அரசும் பக்தர்களுக்கு தேவையான பஸ் வசதிகளை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். இருக்கும்போது இந்து ஆலயங்களை நிர்வகிக்க குன்றக்குடி அடிகளார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனி வாரியம் அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.

  எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் இந்த வாரியம் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது நடைபெறும் இந்த கள்ளத்தனமும் நடந்திருக்காது. தற்போதைய அரசு இந்து ஆலயங்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்.

  கோவில் சொத்துக்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதனை கைப்பற்ற வேண்டும். சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்லும் விவகாரத்தில் நல்ல புரிதல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களுக்கு சம உரிமை வழங்கவில்லை என்று கூறுவது தவறு.

  சபரிமலை தவிர மற்ற அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் எல்லா பெண்களும் சென்று வருகிறார்கள். தற்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #HRaja
  Next Story
  ×