என் மலர்

  செய்திகள்

  கிணற்றில் தள்ளி மனைவி, 3 மகன்கள் கொலை- டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கைது
  X

  கிணற்றில் தள்ளி மனைவி, 3 மகன்கள் கொலை- டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மனைவி மற்றும் 3 மகன்களை கொலை செய்தது குறித்து டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
  காரிமங்கலம்:

  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி நதியா (30). இவர்களுக்கு பூவரசன் (12), சஞ்சய் (8), நிர்மல் (6) என்ற 3 மகன்கள் இருந்தனர்.

  நேற்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நதியா அவரது 3 மகன்கள் ஆகியோர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்கள் வாயில் துணி கட்டியும், உடலில் கற்கள் கட்டியும் இருந்தது.

  இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி இவர்கள் சாவுக்கு காரணமான லோகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

  தனது அக்காள் மற்றும் அக்காள் மகன்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர்கள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் நதியாவின் தம்பி மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் லோகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  முதற்கட்டமாக போலீசார் 4 பேர் இறந்த வழக்கை மர்ம மரணம் (174) பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

  தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

  பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். அந்த அறிக்கை வந்தவுடன் மர்ம மரணம் பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது.

  முதற்கட்டமாக 4 பேரின் மரணத்துக்கு காரணமானவர் என்ற பிரிவின் கீழ் லோகநாதன் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலை வழக்காக மாற்றப்பட்ட பிறகு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.  மேலும் 4 பேர் மரணம் தொடர்பாக லோகநாதனின் தாயார் தேவகி, தந்தை சண்முகம் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். லோகநாதனின் அக்காள் ரேணுகா, அவரது கணவர் முருகேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

  போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் நதியாவும், அவரது குழந்தைகளும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. லோகநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை நதியா தட்டிக்கேட்டார் இதற்கு உதவியாக லோகநாதனின் குடும்பத்தினர் இருந்து உள்ளனர். லோகநாதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை நேரில் சென்று நதியா தட்டிக்கேட்ட விவரம் லோகநாதனுக்கு தெரிய வந்துள்ளது.

  இதனால் அவரும், அவரது உறவினர்களும் இணைந்து நதியாவையும், அவரது மகன்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. #tamilnews
  Next Story
  ×