என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்-கமல் சந்திப்பு பற்றி கருத்து கூற விரும்பவில்லை - மு.க.ஸ்டாலின்
    X

    ராகுல்-கமல் சந்திப்பு பற்றி கருத்து கூற விரும்பவில்லை - மு.க.ஸ்டாலின்

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசியது தொடர்பாக கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதை நிறுத்தக்கோரி நாளை சேலத்தில் நடைபெற இருக்கும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.

    இதில் 3 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கிறார்கள்.

    புழல் சிறையில் ஒரு கைதி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

    இன்று இந்த கருத்தை கூறும் அவர் நாளை என்ன கருத்தை வெளியிடுவார் என தெரிகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசியது குறித்து உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×