என் மலர்
செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜீவானந்தம், கீர்த்திவாசன் ஆகியோரை படத்தில் காணலாம்.
கடலூரில் மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு கட்டிட தொழிலாளி தற்கொலை
கடலூரில் குடும்ப தகராறில் விஷம் கலந்த உணவை 2 மகன்களுக்கு கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கட்டிட தொழிலாளி உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் புதுவண்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவானந்தம் (8), கீர்த்திவாசன் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இன்று காலையும் கார்த்திகேயன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது மனைவி ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வருகிறீர்கள்? என்று கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டது.
அதன் பின்னர் அவரது மனைவி வெளியே சென்று விட்டார். தனது மனைவி திட்டியதால் கார்த்திகேயன் மனவேதனை அடைந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் இருந்த உணவில் விஷத்தை கலந்து தனது மகன்கள் ஜீவானந்தம், கீர்த்திவாசன் ஆகியோருக்கு கொடுத்தார். உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். அதன் பின்னர் கார்த்திகேயன் விஷத்தை குடித்து அவரும் மயங்கினார்.
வெளியே சென்றிருந்த மனைவி வீட்டுக்கு வந்தபோது கணவர் மற்றும் 2 மகன்களும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மயங்கி கிடந்த 3 பேரையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். ஜீவானந்தம், கீர்த்திவாசன் ஆகியோருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story