search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கு- கார்த்திக் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு
    X

    குட்கா ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கு- கார்த்திக் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

    கோவை குட்கா ஆலை முன்பு போலீசார் சோதனை நடத்தியபோது ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
    கோவை:

    கோவை குட்கா ஆலை முன்பு போலீசார் சோதனை நடத்தியபோது திரண்ட தி.மு.க.வினர் வெளிப்படையான சோதனை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட 10 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    இதில் கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர பொறுப்பாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கபிலன், இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், பாப்பம்பட்டி பரமசிவம், ராவத்தூர் செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கார்த்திக் எம்.எல்.ஏ., சோமனூர் தங்கராஜ், சுந்தரம் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் வழக்குபதிவு செய்த சுந்தரம் என்பவர் யார் என்று தெரியவில்லை என தி.மு.க.நிர்வாகிகள் கூறினர்.

    இந்நிலையில் கார்த்திக் எம்.எல்.ஏ., சோமனூர் தங்கராஜ் ஆகியோருக்கு முன்ஜாமீன் கேட்டு கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று விடுமுறை கால சிறப்பு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் கார்த்திக் எம்.எல்.ஏ., சோமனூர் தங்கராஜ் ஆகியோரது ஜாமீன் மனு விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
    Next Story
    ×