search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காருடன் பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசி, குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.
    X
    காருடன் பறிமுதல் செய்யப்பட்ட ரே‌ஷன் அரிசி, குட்கா மூட்டைகளை படத்தில் காணலாம்.

    வேலூர் வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 மூட்டை குட்கா பறிமுதல்

    வேலூர் வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 5 மூட்டை குட்கா 1 டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    காட்பாடி செங்குட்டை பகுதியில் தாசில்தார் ஜெயந்தி, பறக்கும்படை தாசில்தார் பழனி, வட்ட வழங்கல் அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வேலூரில் இருந்து ஆந்திராவை நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    காரில் ஒரு டன் ரே‌ஷன் அரிசி, 40 கிலோ கோதுமை மற்றும் தடை செய்யப்பட்ட 5 மூட்டை குட்கா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரே‌ஷன் அரிசியை திருவலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.

    குட்கா மூட்டைகள் காட்பாடி வட்டார உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. ரே‌ஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய கார் டிரைவர் யார்? குட்கா மூட்டையை எங்கிருந்து கடத்தி வந்தார். இதற்கு உடந்தையாக உள்ளவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×