என் மலர்
செய்திகள்

மோடி பிரதமராக இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- புகழேந்தி பேச்சு
மோடி பிரதமராக இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்று திருச்சியில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் புகழேந்தி பேசினார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி பேசியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றம் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. எந்த தீர்ப்பை கண்டும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அஞ்சாது. முன்னாள்அமைச்சர்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு பின்னால் இருக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் டெண்டர்கள் இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு பின்னால் தொண்டர்கள் இருக்கின்றனர்.
இந்த ஆட்சி, அதிகாரம், இரட்டை இலை, கொடி எங்களுக்கு சொந்தம். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நிலைமை மாறும். மோடி பிரதமராக இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story