என் மலர்

    செய்திகள்

    கூட்டத்தில் வைகை செல்வன் பேசியபோது எடுத்தபடம்.
    X
    கூட்டத்தில் வைகை செல்வன் பேசியபோது எடுத்தபடம்.

    தினகரன் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது - முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தினகரன் தமிழகத்திற்கு எந்த காலத்திலும் முதல்வராக முடியாது என்று முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறினார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார்.

    பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தினகரன் ஆரம்பித்துள்ள கட்சி பிராய்லர் கோழி போன்றது, அது முட்டையிடாது, குஞ்சு பொறிக்காது, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படலாமா? அதற்கு அவர் தகுதியானர் இல்லை.

    தினகரன் தமிழகத்திற்கு எந்த காலத்திலும் முதல்வராக முடியாது. வேண்டுமானால் ஒரு டுட்டோரியல் காலேஜ் ஆரம்பித்து அதற்கு வேண்டுமானால் முதல்வர் ஆக முடியும்.

    தினகரன் தகுதியான ஆள் இல்லை என்பதை அவருடைய தாய்மாமனே சொல்கிறார். கடந்த 2011 ம் ஆண்டே முதல்வராக வர வேண்டும் என ஆசைப்பட்டார். அவரால் தான் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் என அவரது தாய்மாமனே கூறுகிறார்.

    தற்போது அ.மு.ம.க. கட்சியை ஆரம்பித்து காவிரி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை என போராட்டம் நடத்தி வருகிறார். ஏன் அம்மா இருக்கும் போது 10 வருடங்கள் வீட்டில் முடங்கி கிடந்தபோது போராட்டம் நடத்த வேண்டியதுதானே ஏன் நடத்தவில்லை.

    கமல் என்பவர் நல்ல நடிகர் தான். அதை நாங்கள் ஏற்று கொள்கிறோம், அதற்காக மக்கள் நீதி மய்யம் என கட்சி ஆரம்பித்துள்ளார். மய்யம் என்றால் என்ன என்று கேட்டால் பிணம் என சொல்வார்கள். எனவே பிணத்தை வைத்து கட்சி நடத்துகிறாரா?

    அதே போன்று ஆன்மீக அரசியல் என ரஜினி கூறி வருகிறார். இங்கு ஆன்மீக அரசியல் கிடையாது. இது பெரியார் பிறந்த பூமி. இங்கு ஆன்மீக அரசியல் செல்லுபடியாகாது. கமல் தனது மனைவிக்கே இன்னும் கடனை தராமல் உள்ளார். ரஜினி தான் நடத்தும் பள்ளிக்கு இதுவரை வாடகை கொடுக்காமல் கடனாளியாக உள்ளார், தினகரன் ஆர்.கே. நகர். வாக்காளர்களுக்கு இதுவரை பணம் தராமல் கடன்காரராக உள்ளார்.

    இந்த 3 கடன்காரார்களும் சேர்ந்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போகிறார்களா?

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×