என் மலர்
செய்திகள்

பவானி அருகே நாய்க்கு மயக்க மருந்து தெளித்து 45 பவுன் நகை கொள்ளை
பவானி அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பவானி:
பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் அடுத்த சூர்யா நகரை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 51). தொழில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவில் பங்கேற்க கேரளா சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டமர்ம ஆசாமிகள் வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் புகுந்த அவர்கள் பீரோவையும் உடைத்தனர். பிறகு அங்கிருந்த 45 பவுன் நகைகளை சுருட்டினர். மேலும் பீரோவில் இருந்த 47 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர். பிறகு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.
சார்லஸ் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு கிடந்ததை பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேரளாவில் உள்ள சார்லசுக்கு தகவல் கொடுக்க உடனே அவர் குடும்பத்தினருடன் ஊருக்கு விரைந்தார்.
வீட்டில் வந்து பார்த்த போது கொள்ளையர்கள் புகுந்து நகை-பணம் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சார்லஸ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக கொள்ளை சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது.
வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நாயக்கு மயக்க மருந்து தெளித்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கைவரிசை காட்டியிருப்பது வடமாநில கொள்ளையர்களாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள். #Tamilnews

Next Story