என் மலர்
செய்திகள்

கூட்டத்தில் சரத்குமார் பேசியபோது எடுத்த படம். அருகில் விஜயகாந்த், பிரேமலதா, சத்யராஜ், ஆர்.கே.செல்வமணி.
விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்- சரத்குமார் பேச்சு
விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம் என்று படப்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Vijayakanth
ஸ்ரீபெரும்புதூர்:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி சாதனை விழாவும், தே.மு.தி.க. மண்டல மாநாடும், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை அருகே உள்ள கரசங்காலில் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்ட தே.மு.க. செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.
கலைத்துறை என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளது என்பதற்கு இங்கு வந்துள்ள கூட்டமே சாட்சி. கலைதுறை மிகவும் மோசமான சூழலில் உள்ளது.
அதை விரைவில் மீட்பேன். கலைத்துறைக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று தீர்த்து வைப்பேன். இந்த துறையினருக்கு என்றும் கை கொடுப்பேன். எந்த பிரச்சனை என்றாலும், பேசி தீர்க்க முடியும். அதற்கு நானும் உதவ தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கேப்டன் கலை துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்தது. அவர் கஷ்டப்பட்டு அதை கடனில் இருந்து மீட்டார். அதை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்.
தற்போது நடிகர் சங்கம் மிக மோசமான சூழலில் உள்ளது. இதுபற்றி பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கட்டான சூழலில் இருந்து அதை மீட்டு கேப்டன் கலைத்துறைக்கு நல்லது செய்வார்.
கலைத்துறையில் அனைவருடனும் நட்பாக இருப்பவர் கேப்டன். கேப்டனின் 50 ஆண்டு கலைத்துறை விழா சிறப்பாக அமைய வேண்டும். அவர் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக திகழ்ந்து வருகிறார்.
எனக்கு திரைப்பட துறையில் மறக்க முடியாத நபர் கேப்டன். நான் திரை துறையில் இந்த அளவுக்கு முனனேறியதற்கு கேப்டன் தான் காரணம். அவருடன் சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது.
அரசியலில் வேறு வேறு பாதையில் இருந்தாலும் நன்றாக பழக கூடிய நல்ல நண்பர் கேப்டன். நான் இங்கு வந்து பேசுவதால் கேப்டனுடன் கூட்டணி வைப்பேன் என நினைத்தால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கேப்டனுடன் அரசியலில் இணையும் சூழல் வந்தால் இணைந்து மக்களுக்கு பணியாற்றுவேன். விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-
கேப்டன் எல்லோருக்கும் நல்ல நண்பர். மனித நேயம் மிக்க நல்ல மனிதர். உதவி என்று வந்தால் இல்லை என்று சொன்னதில்லை.
கலைத்துறையில் அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர் உள்ளனர். அவருடன் வாழும் இந்த காலம் பொற்காலம்.
கேப்டன் 1978-ல் திரைப்பட துறைக்கு வந்ததில் இருந்து அவருடன் ஒன்றாக நடித்து உள்ளேன். கலை துறைக்கு எத்தனையோ நல்ல பல விஷயங்களை செய்துள்ளார். அவர் நடிகர் சங் தலைவராக இருந்த போது சங்கம் கடனில் இருந்தது. அதை கடனில் இருந்து போராடி மீட்டார். கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டில் நடத்தி கலை துறையில் இருந்தவர்களுக்கு பெரும் உதவினார். சண்டை காட்சியில் டூப் இல்லாமல் பல காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
திரைப்பட விநியோ கஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்து ராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, விக்ரமன், நடிகர் மயில்சாமி நடிகைகள் ராதா, அம்பிகா, காஞ்சி மாவட்ட தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் போந்தூர் சிவா, மாவட்ட செயலாளர் போந்தூர் திருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story