என் மலர்tooltip icon

    செய்திகள்

    வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் செய்தனர்.
    X
    வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

    சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அரசியல் கட்சியினர், மாணவர்கள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் புறக்கணித்தனர். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே திரண்டனர். அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் 100 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். #Tamilnews
    Next Story
    ×