என் மலர்
செய்திகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் லதா ரஜினிகாந்த் யாகம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தசா மகாவித்யா யாகம் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய யாகத்தில் லதா ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் வேண்டியும் தசா மகாவித்யா ஹோமம் இன்று தொடங்கியது. இந்த யாகம் வருகிற 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 7 மணிக்கு யாகம் தொடங்குவதற்கு முன்பாக திடீரென நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.
அவர் காமாட்சி அம்மனை பயபக்தியுடன் கும்பிட்டார். பின்னர் 8 மணி அளவில் தொடங்கிய யாகத்தில் அவர் பங்கேற்றார். பின்னர் 8.30 மணி அளவில் லதா ரஜினிகாந்த் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘உலக நன்மைக்காகவும், மக்கள் நலம் வேண்டியும் நடைபெறும் இந்த யாகத்தில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
இன்று காலை நடந்த யாகத்துடன் தலைமைப் பதவிக்கு வர வேண்டும், எதிரிகள் பலம் குறைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஸ்ரீதட்சிண காளியாகமும் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மனுக்கு ரஜினிகாந்த் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பிரசாதம் அவரது வீட்டிற்கு கொண்டு சென்று கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யாகம் குறித்து கோவிலில் அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி கூறியதாவது:-
உலக நன்மைக்காகவும் மக்கள் நலம் வேண்டியும் காமாட்சியம்மன் கோவிலில் இன்று காலை தொடங்கி வரும் 18-ந் தேதி வரை 10 நாட்கள் தசா மகாவித்யா ஹோமம் நடைபெறுகிறது.
இந்த ஹோமத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் மத்திய- மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தினமும் காலை 7.30 மணிமுதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணிமுதல் 8.30 மணி வரையிலும் இந்த ஹோமம் நடைபெறுகிறது.
இதற்கு முன் இந்த ஹோமம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது என்று அவர் கூறினார். #Tamilnews

Next Story