என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ கண்காட்சி- மாமல்லபுரத்துக்கு பீரங்கி வண்டிகள், போர் விமானங்கள் வருகை
    X

    ராணுவ கண்காட்சி- மாமல்லபுரத்துக்கு பீரங்கி வண்டிகள், போர் விமானங்கள் வருகை

    மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கவிருக்கும் பிரமாண்டமான ராணுவ கண்காட்சிக்கு பீரங்கி வண்டிகள், போர் விமானங்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.
    மாமல்லபுரம்:

    மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சர்வதேச ராணுவ கண்காட்சி இந்த ஆண்டு சென்னை அருகே மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 4 நாட்கள் நடை பெறுகிறது.

    இதில் இந்திய ராணுவத்தின் பீரங்கி டாங்கிகள் அணிவகுப்பு, பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், விமானங்கள் சாகசம், ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் கண்காட்சிகளில் இடம் பெறுகின்றன.

    இந்த கண்காட்சி வர்த்தக பார்வையாளர்களுக்காக 11-ந்தேதி திறக்கப்படும். பின்னர் 12-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி கண்காட்சியை தொடங்கி வைப்பார்.

    இதுவரை நடத்தப்பட்ட ராணுவ கண்காட்சியில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிகளவில் இடம் பெற்று வந்தன. தற்போது அதிகப்பட்சமாக 523 இந்திய நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன.

    மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 70 பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. 154 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அமெரிக்கா, சுவிடன், ரஷியா, இஸ்ரேல், பின்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    ராணுவ கண்காட்சியில் பீரங்கிகள் பங்கு பெறுவதற்காக மாமல்லபுரத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. பீரங்கிகள் டிரைலர் லாரிகளில் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. அவைகள் மாமல்லபுரம் கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒத்திகைகள் நடைபெறுகின்றன.



    இதேபோல் மாமல்லபுரம் கடலில் இந்திய கடலோர கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், ராணுவ தளவாடங்கள் வைக்கப்படும்.

    மாமல்லபுரத்துக்கு அணி வகுத்து செல்லும் பீரங்கிகளை அப்பகுதி மக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×