என் மலர்

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.
    X
    கைது செய்யப்பட்ட வாலிபர்கள்.

    பொள்ளாச்சி அருகே நண்பரை தாக்கி மருத்துவ மாணவி கற்பழிக்க முயற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொள்ளாச்சி அருகே அணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது நண்பரை தாக்கி மருத்துவ மாணவியை கற்பழிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு சித்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருபவர் பிரஜித். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு.

    சம்பவத்தன்று பிரஜித் தன்னுடன் படிக்கும் தோழி ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை அணைக்கு வந்தார்.

    இரவு 9 மணியளவில் அங்கு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் வேடம் அணிந்த 3 வாலிபர்கள் மருத்துவ மாணவர் பிரஜித்தை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்தனர். பின்னர் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர்.

    சுதாரித்துக்கொண்ட அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.

    மருத்துவ மாணவ- மாணவியை விரட்டி வந்த கும்பலை வீட்டில் இருந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விரட்டி விட்டனர். இதுகுறித்து பிரஜித் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். பின்னர் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தென்மண்டல ஐ.ஜி. அஜித்குமாருக்கு தகவல் கிடைத்ததும் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்து 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பாலக்காடு டி.ஒய்.எஸ்.பி. விஜயகுமாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் வாலிபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வாலிபர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் உள்ள வண்ணாமடையை சேர்ந்த ஜெயகுமார் (வயது 27), கண்ணுமாரியை சேர்ந்த கண்ணன் (42), ஆட்டையாம்பதியை சேர்ந்த மனோஷ் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் இதுபோன்று வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. #Tamilnews
    Next Story
    ×