என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்- அன்புமணி
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்- அன்புமணி

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு நிர்வாகமே கிடையாது. வலிமையான தலைமை கிடையாது. அதனால் பல உரிமைகளை இழந்து இருக்கிறோம். பல சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் நடக்கிறது.

    காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் கர்ப்பிணி உயிரிழந்தது. கல்லூரி மாணவி கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் நடை பெறுகிறது.

    இதற்கு காரணம் நல்ல தகுதியான அதிகாரிகள் நியமனம் செய்யவில்லை. நல்ல தகுதியான அதிகாரிகள் சாதாரண பொறுப்பில் இருக்கிறார்கள்.

    லஞ்சம் வாங்கி தருகின்றவர்களை செயலாளர்களாகவும், துறை செயலாளர்களாகவும் நியமித்து இருக்கிறார்கள்.

    தற்போதுள்ள சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் நல்ல அதிகாரிதான். அவருக்கு அரசாங்கம் முழு அதிகாரம் கொடுக்க வேண்டும்.

    எம்.ஜி.ஆர். என்ன ஆட்சி கொடுத்தார். காமராஜர் ஆட்சி கொடுப்பேன் என்று ரஜினி சொன்னாலும் பரவாயில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வருகிற மார்ச் 29-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் 30-ந்தேதி விவசாயிகள், இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். உச்சநீதி மன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வில்லை. அரசியல் சாசன நெருக்கடியை மத்திய அரசுக்கு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×