என் மலர்

  செய்திகள்

  சென்னையில் மானிய ஸ்கூட்டர் வழங்க மோடி வந்தபோது அவமரியாதை செய்தவர் கைது
  X

  சென்னையில் மானிய ஸ்கூட்டர் வழங்க மோடி வந்தபோது அவமரியாதை செய்தவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் விதத்தில் நடந்துக்கொண்ட கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
  சென்னை:

  தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த சனிக்கிழமை நடந்தது.

  இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மோடி விமான நிலையத்தில் இருந்து அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் காரில் கலைவாணர் அரங்கத்துக்கு புறப்பட்டார்.

  அவரை வரவேற்க சாலையின் இருபுறமும் ஏராளமானோர் காத்திருந்தனர். மோடியின் கார் கடற்கரை சாலையை கடந்தபோது ஜெயலலிதா நினைவிடம் அருகே நின்ற கூலித்தொழிலாளி ஒருவர் ரகளை செய்ததுடன் பிரதமரை அவமரியாதை செய்யும் வகையிலும் நடந்து கொண்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை எச்சரித்தனர்.

  அப்போது பரபரப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவரை கைது செய்யாமல் அனுப்பி வைத்தனர்.

  இந்த நிலையில் மோடியை அவமரியாதை செய்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழனி என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். #Tamilnews
  Next Story
  ×