என் மலர்

  செய்திகள்

  இலங்கை கடல் பகுதியில் 7 கிலோ தங்கம் பறிமுதல் - தமிழகத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை
  X

  இலங்கை கடல் பகுதியில் 7 கிலோ தங்கம் பறிமுதல் - தமிழகத்தை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை கடல் பகுதியில் ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ தங்கத்தை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 2 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  ராமேசுவரம்:

  இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்பட்டி கந்தகுலியா கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த படகில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் இருப்பதை அறிந்த இலங்கை கடற்படையினர் படகு முழுவதும் சோதனையிட்டனர்.

  அப்போது 7 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் இலங்கை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று கூறப்படுகிறது.

  இதுகுறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல ராமேசுவரத்தில் உள்ள மத்திய புலனாய்வு துறையினரும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #tamilnews
  Next Story
  ×